தமிழ்நாடு

பிரிட்டனில் இருந்து காஞ்சிபுரம் வந்த 7 பேருக்கு கொரோனாவா? சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

Veeramani

(கோப்பு புகைப்படம்)

பிரிட்டனில் இருந்து காஞ்சிபுரம் வந்த 7 பேரிடம் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற கோணத்தில் ரத்த மாதிரிகள் சேகரித்து ஆய்வு நடத்தி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், அங்கிருந்து நவம்பர் 25ஆம் தேதி தமிழகம் வந்த அனைத்து பயணிகளையும் கண்காணிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பிரிட்டனில் இருந்து 7 பேர் வந்திருப்பது தெரியவந்தது.

இதில், குன்றத்தூர் தாலுகாவை சேர்ந்த 4 பேரும், காஞ்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்த மூன்று பேரும் ஆவர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதோடு, 7 பேரின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, பிரிட்டனில் இருந்து கடந்த சில தினங்களில் தமிழகம் வந்திருந்த சுமார் இரண்டாயிரத்து 800 பேர் முழு கண்காணிப்பில் உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.