தமிழ்நாடு

"மருந்தொன்றும் காணாத..” கொரோனா விழிப்புணர்வில் குறள்..! பொதுமக்கள் வரவேற்பு

"மருந்தொன்றும் காணாத..” கொரோனா விழிப்புணர்வில் குறள்..! பொதுமக்கள் வரவேற்பு

webteam

கொரோனா குறித்த விழிப்புணர்வை திருக்குறள் வாயிலாக வெளிப்படுத்தும் வகையில் திருச்சிப் பகுதிகளில் எழுதி வைக்கப்பட்ட குறள் ஒன்று மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

மக்கள் கூடும் இடங்களில், முன்னதாக கண்கவரும் பொருட்களை விற்றவர்கள் இன்று முகக் கவசங்களை விற்று வருகின்றனர். கொரோனா குறித்த விழிப்புணர்வை அரசு எவ்வாறு வெளிப்படுத்தி வருகிறதோ, அதே போல தன்னார்வலர்கள் சிலரும் கொரோனா குறித்த விழிப்புணர்வை அவர்களுக்குத் தெரிந்த பாணியில் மக்களிடம் கொண்டு செல்கின்றனர்.

அந்த வகையில் திருச்சிப் பகுதியில் உள்ள சுவர்களில் இருந்த ஓவியங்களும், திருக்குறள் சார்ந்த வாக்கியங்களும் இன்று கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியங்களாக மாற்றப்பட்டுள்ளன. தனித்திரு விழித்திரு வாக்கியங்களையும் அங்குள்ள பலப்பகுதிகளில் பார்க்க முடிகிறது. இதற்கெல்லாம் மேலாக கொரோனா விழிப்புணர்வை திருக்குறள் வாயிலாக வெளிப்படுத்தும் வகையில் திருச்சி நீதிமன்ற ரவுண்டான அருகே உள்ள லாசன்ஸ் சாலையில்

"மருந்தொன்றும் காணாத இந்நோய்க்குதூய்மை மாற்றம் காண்பது நன்று" என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. இக்குறள் அங்குள்ள மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.