தமிழ்நாடு

புழல் சிறையில் கொரோனா?: கைதிகளுக்கு பரிசோதனை

புழல் சிறையில் கொரோனா?: கைதிகளுக்கு பரிசோதனை

webteam

புழலில் இருந்து பிற சிறைகளுக்கு சென்ற 5 கைதிகளுக்கு கொரோனா உறுதியானதால் புழல் சிறையில் உள்ள கைதிகள், சிறைக்காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.

சென்னை புழல் மத்திய சிறையின் தண்டனை பிரிவில் சுமார் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். பிற மாவட்டங்களில் உள்ள மத்திய சிறைகளை சேர்ந்த தண்டனை கைதிகள் சிலர் புழல் சிறையில் பயிற்சி முடித்து மீண்டும் அவர்களது சிறைக்கு திரும்பியபோது கடலூர், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய சிறைகளில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் புழல் சிறையில் இருந்து இவர்களுக்கு தொற்று பரவி இருக்குமா, அல்லது இவர்களிடம் இருந்து புழல் கைதிகளுக்கு தொற்று பரவி இருக்குமோ என சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 5 கைதிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு முதற்கட்டமாக பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 74 கைதிகள், 19 சிறைக்காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.