தமிழ்நாடு

தமிழகத்தில் வேகமாய் சரியும் தினசரி கொரோனா பாதிப்பு- சென்னை 4508, கோவை 3309 பேருக்கு தொற்று

தமிழகத்தில் வேகமாய் சரியும் தினசரி கொரோனா பாதிப்பு- சென்னை 4508, கோவை 3309 பேருக்கு தொற்று

கலிலுல்லா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

நேற்றுவரை 2,13,534 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. தமிழகத்தில் நேற்று 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46 பேர் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

19.4% லிருந்து 18.3% ஆக தமிழகத்தின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே போல் தமிழகம் முழுவதும் ஐசியூவில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை நேற்று 1104 பேர் இருந்த நிலையில் இன்று 1063 ஆக குறைந்துள்ளது. திருப்பூரில் மட்டுமே அதிகபட்சமாக 29.1% பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.