தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக 1000ஐ கடந்த கொரோனா பாதிப்பு தற்போது 1600ஐத் தாண்டியுள்ளது. இன்று 80,634 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒரேநாளில் தொற்று 1636ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா காரணமாக மேலும் 12 பேர் இறந்தநிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,630ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 9,746ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியது; சென்னையில் இன்று 633 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3000 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டில் 178 பேர், கோவை 147 பேர், தஞ்சையில் 72 பேர், காஞ்சிபுரத்தில் 56 பேர் மற்றும் திருப்பூரில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.