தமிழ்நாடு

சென்னை: கேஎம்சி, ஸ்டான்லி மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் நிரம்பின

சென்னை: கேஎம்சி, ஸ்டான்லி மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் நிரம்பின

webteam
சென்னையில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளிலும் உள்ள கொரோனா நோயாளிகளின் படுக்கைகள் முழுவதுமாக நிரம்பிவிட்டன.
 
சென்னை ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகள் நிரம்பிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 300 படுக்கைகள் கொண்ட கீழ்ப்பாக்கம் மருத்துவமனை கொரோனா வார்டில் தற்போது 298 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மேலும் 100 படுக்கைகளை மட்டுமே போட முடியும்‌. தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டியிருப்பதால் 500 படுக்கைகள் போட வேண்டிய இடத்தில் 150 BED-கள் மட்டுமே உள்ளன. 
 
 
இதே போல் ஸ்டான்லி மருத்துவமனையின் கொரோனா வார்டில் உள்ள 240 படுக்கைகளும் நிரம்பிவிட்டன. அங்கு இதற்கு மேல் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது. எனினும் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 600 படுக்கைகளும், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 600 படுக்கைகளும், ராயபுரத்தில் காலியாக உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சுமார் 500 படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 
 
சென்னையில் இதுவரை ஆயிரத்து 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.