தமிழ்நாடு

ஆம்புலன்ஸ் வர காலதாமதம்: சரக்கு ஆட்டோவில் அழைத்து வரப்பட்ட கொரோனா நோயாளி

ஆம்புலன்ஸ் வர காலதாமதம்: சரக்கு ஆட்டோவில் அழைத்து வரப்பட்ட கொரோனா நோயாளி

kaleelrahman

மதுரையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் கொரோனோ நோயாளியை 30 கி.மீ தூரம் சரக்கு ஆட்டோவில் அழைத்து வரப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.

மதுரையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முடுவார்பட்டி கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த பரணிமுத்து (31) என்பவருக்கு சமீப காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அதே ஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் பரணிமுத்துக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது,

இந்நிலையில், பரணிமுத்துக்கு அதீத மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து முடுவார்பட்டி அரசு ஆரம்ப நிலையத்திற்கு பரணிமுத்தை உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர், பரணிமுத்துவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி அறிவுறுத்தினர். இதனையடுத்து உறவினர்கள் அம்புலன்ஸ் சேவை மையத்தை அழைத்த போது கால தாமதம் ஏற்படும் என கூறியதால் உடனடியாக முடுவார்பட்டியில் இருந்து சிறிய ரக சரக்கு வாகனத்தில் பரணிமுத்துவை 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மதுரை கொரோனோ சிறப்பு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து வந்து சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்,

இது குறித்து முடுவார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் கேட்டபோது 'அலங்காநல்லூர் வட்டாரத்தில் கொரோனோ நோயாளிகளுக்காக ஒரு அம்புலன்ஸ் மட்டுமே உள்ளதாகவும் அந்த அம்புலன்ஸ் வேறு ஒரு நோயாளியை அழைத்துச் சென்றதால் அம்புலன்ஸ் வருவதற்கு 1 மணி நேரமாகும் என கூறினார்கள், இதனையடுத்து உறவினர்கள் தாங்களாகவே சரக்கு வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்' என தெரிவித்தனர்.