உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இதுவரை நீதிபதிகள் உள்ளிட்ட 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையால் மதுரையில் நேற்று ஒரு நாள் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஊழியர்கள் இருவருக்கு கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு நீதிபதிகள், அவர்களுக்கு கீழ் பணியாற்றும் அனைத்து அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர்கள் ஆகியோருக்கு பல கட்டமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நீதிபதி உட்பட 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கறிஞர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.