தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு

sharpana

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8000ஐ நெருங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

93,005 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 7,987 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமே 2,558 பேருக்கு ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 10 நாட்களில் கொரோனா பரவலின் பாதையை தற்போது பார்க்கலாம்.

ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் 3 ஆயிரத்து 645 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஏப்ரல் 7ஆம் தேதி 3 ஆயிரத்து 986 ஆகவும், 8ஆம் தேதி 4 ஆயிரத்து 276 ஆகவும் புதிய தொற்றுகள் இருந்தன. ஆனால் 9ஆம் தேதி தொற்று பரவல் கடுமையாக அதிகரித்து 5 ஆயிரத்து 441ஐ தொட்டது. ஏப்ரல் 10ஆம் தேதி, 5 ஆயிரத்து 989 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 11ஆம் தேதி தொற்று எண்ணிக்கை 6 ஆயிரத்து 618 ஆக பதிவானது. ஏப்ரல் 12ஆம் தேதி 6 ஆயிரத்து 711 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 13ஆம் தேதி 6 ஆயிரத்து 984 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக ஒரே நாளில் 7 ஆயிரத்து 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த தமிழக நிலவரத்தை போலவே சென்னையிலும் கொரோனா பரவல் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஏப்ரல் 5ஆம் தேதி சென்னையில் ஆயிரத்து 335 பேர் பாதிக்கப்பட்டனர். 6ஆம் தேதி அந்த எண்ணிக்கை குறைந்து ஆயிரத்து 303 ஆக பதிவானது. ஆனால் அதற்கு பிறகு தொற்று எண்ணிக்கை மீண்டும் ஏற்றப்பாதைக்கு திரும்பியது. 7ஆம் தேதி ஆயிரத்து 459 ஆக அதிகரித்த தினசரி தொற்றுகள் 8ஆம் தேதி ஆயிரத்து 520 ஆக உயர்ந்தது. 9ஆம் தேதி ஆயிரத்து 752 ஆக இருந்த புதிய தொற்றுகள், 10ஆம் தேதி ஆயிரத்து 977ஆக உயர்ந்தது. 11ஆம் தேதி பாதிப்பு 2 ஆயிரத்து 124 ஆக அதிகரித்தது. ஏப்ரல் 12ஆம் தேதி ஒரே நாளில் 2 ஆயிரத்து 105 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 13ஆம் தேதி 2 ஆயிரத்து 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏப்ரல் 14ஆம் தேதி 2 ஆயிரத்து 564 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.