தமிழ்நாடு

சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு!!

சென்னையில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு!!

webteam

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த இருவர் இன்று உயிரிழந்தனர்.

தமிழகத்தில் நேற்று 669 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மாநிலத்திலேயே சென்னையில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 3,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த இருவர் இன்று உயிரிழந்தனர். சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 67வயதான ஆண் ஒருவரும், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த 64 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்தனர். இதனை அடுத்து சென்னையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. தமிழக அளவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 49ஆக அதிகரித்துள்ளது.