தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1,11,590 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 10916 பேர், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 25 பேர் என 10,941 பேருக்கு கொரோனா தொற்று கடந்த 24 மணிநேரத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் மட்டும் 3347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இரண்டாவது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. செங்கப்பட்டில் கொரோனா பாதிப்பு 1000ஐ நெருங்கியுள்ளது.
செங்கல்பட்டில் 970, கோவையில் 735, திருவள்ளூரில் 535, சேலத்தில் 359, மதுரையில் 328 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒரேநாளில் 44 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,157 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 22 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 22 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 75,116ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவிலிருந்து மேலும் 6,172 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 9,14,119 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியிலும் நாளைமுதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.