தமிழ்நாடு

தமிழகத்தில் 6000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 6000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு

Sinekadhara

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 6000-ஐ கடந்துள்ளது. இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 6,583, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 35 பேர் என 6,618 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்கெனவே 1,977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு 2000-ஐ கடந்தது. கடந்த 24 மணிநேரத்தில் 2,124 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக மேலும் 22 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,908ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 41,955ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 2,314 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 8,78,571 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.