தமிழ்நாடு

தமிழகத்தில் 2200ஐ கடந்தது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 2200ஐ கடந்தது கொரோனா பாதிப்பு

Sinekadhara

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2200ஐ கடந்தது.

தமிழகத்தில் 2271, வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்துவந்த 8 பேர் என இன்று 2279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 80,704 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரேநாளில் தொற்று எண்ணிக்கை 2279ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் ஏற்கெனவே 833 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இன்று மேலும் 815 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவால் மேலும் 14 பேர் இறந்தநிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,684ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் 13,983ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 1352 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 8,55,085 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.