தமிழ்நாடு

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று

jagadeesh

தமிழகத்தில் கொரோனா ஒரேநாளின் பாதிப்பு 80 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி ஒரே நாளில் ஆயிரத்து 8 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு தற்போது ஒரே நாளில் ஆயிரத்து 87 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன்மூலம் இதுவரையிலான பாதிப்பு 8 லட்சத்து 64 ஆயிரத்து 450ஆக அதிகரித்துள்ளது.

அதே போல், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 6 ஆயிரத்து 690ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 610 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதை அடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 45 ஆயிரத்து 178ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 9 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 582ஆக உயர்ந்துள்ளது.