தமிழ்நாடு

கோவாக்சின் தடுப்பூசி விலையை 33% குறைத்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம்!

கோவாக்சின் தடுப்பூசி விலையை 33% குறைத்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம்!

kaleelrahman

பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசி விலையை ரூ.600-ல் இருந்து ரூ.400-ஆக குறைத்துள்ளது.

இந்தியாவில் பரவிவரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சுனாமி வேகத்தில் பரவிவரும் இந்த  கொரோனாவுக்கு மருந்தாக தடுப்பூசிகள் பயன்படுகிறது. இந்த தடுப்பூசிகளை மத்திய அரசு வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கி வந்த நிலையில், மாநில அரசுகளே நேரிடையாக வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து தடுப்பூசி விலையை நிறுவனங்கள் உயர்த்தியது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கு கொடுப்பதாக சொல்லியிருந்த நிலையில் ரூ.100 குறைத்து 300 ரூபாய்க்கு தருகிறோம் அறிவித்தது.

இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனமும் கோவாக்சின் விலையை 33 சதவீதம் குறைத்துள்ளது. அதாவது மாநில அரசுகளுக்கு ஒரே டோஸ் தடுப்பூசி விலை ரூ.600-ல் இருந்து ரூ.400-ஆக குறைத்துள்ள பாரத் பயோடெக் நிறுவனம், தனியார் மருத்துமனைகளுக்கு ஏற்கெனவே நிர்ணயித்த ரூ. 1200 என்ற விலையில் மாற்றம் இல்லை என அறிவித்தள்ளது.