தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 401 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு

கலிலுல்லா

தமிழகத்தில் 401 காவலர்களுக்கு கொரோனா பரவியதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 141 காவல் துறையினர் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலில் முக்கிய முன்கள பணியாளர்களாக செயல்படுபவர்கள் காவல்துறையினர். கொரோனா ஒவ்வொரு அலையின் போதும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு பொதுமக்களிடம் கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க களத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல்வேறு காவல் துறையினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் கடந்த மூன்று அலைகளில் 8,030 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 143 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது அலையிலும் காவல்துறையில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் காவல்துறை சேர்ந்தவர்கள் 401 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் இன்றுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சென்னையில் மட்டுமே காவல்துறையில் 141பேர் பாதித்துள்ளனர். இதில் 20 க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் வீடுகளில் தனிமைபடுத்திக் கொண்டனர்.