தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவுக்குப் பின் கிர்ர்ர்.. என்று எகிறிய கொரோனா பாதிப்பு - புள்ளிவிவரம்

webteam

தமிழகத்தில் கடந்த 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதிவரை கொரோனா பாதிப்பிற்கு ஆளானவர்கள் எண்ணிக்கை நாள் தோறும் எந்த வேகத்தில் அதிகரித்தது என்ற விவரங்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதியிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. மார்ச் 21ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் கொரோனாவால் தலா 3 பேர் பாதிக்கப்பட்டனர். அந்த எண்ணிக்கை மார்ச் 24ஆம் தேதி இரட்டிப்பாகியது. மார்ச் 25ஆம் தேதி 8 பேரும், 26ஆம் தேதி ஒருவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர்.

அதன்பின் மார்ச் 27ஆம் தேதி ஒருநாளில் மட்டும் 9 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளானது தமிழக மக்களைக் கவலையடையச் செய்தது. மார்ச் 28ஆம் தேதி 4 பேர், மார்ச் 29 தேதி 10 பேர் , மார்ச் 30ஆம் தேதி 17 பேர் என கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து கொண்டே வந்தது. ஆனால் மார்ச் 31ஆம் தேதி ஒரே நாளில் 57பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மக்களைப் பதற்றத்தில் ஆழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 1ஆம் தேதி இந்த எண்ணிக்கை 110 ஆக உயர்ந்து அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியவர்களின் எண்ணிக்கை ஊரடங்கிற்கு முன் 18 ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது 234ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 29ஆம் தேதி தமிழகத்தில் அரை சதம் அடித்த கொரோனா தற்போது தனது கோரப்பிடியை இறுக்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு:

மார்ச் 21 - 3பேர்
மார்ச் 22 - 3பேர்
மார்ச் 23 - 3 பேர்
மார்ச் 24 - 6 பேர்
மார்ச் 25 - 8 பேர்
மார்ச் 26 - 1நபர்
மார்ச் 27 - 9பேர்
மார்ச் 28 - 4பேர்
மார்ச் 29 - 10பேர்
மார்ச் 30 - 17 பேர்
மார்ச் 31 - 57 பேர்
ஏப்ரல் 1 - 110 பேர்

தமிழகத்தில் கொரோனா தாக்குதல் எண்ணிக்கை:

மார்ச் 21 - 6பேர்
மார்ச் 22 - 9பேர்
மார்ச் 23 - 12பேர்
மார்ச் 24 - 18 பேர்
மார்ச் 25 - 26 பேர்
மார்ச் 26 - 27பேர்
மார்ச் 27 - 36 பேர்
மார்ச் 28 - 40 பேர்
மார்ச் 29 - 50பேர்
மார்ச் 30 - 67பேர்

மார்ச் 31 -124 பேர்
ஏப்ரல் 1 - 234 பேர்