கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,63,064 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,73,858 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,46,523 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 30,42,683 ஆக உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,37,170 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,06,195ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,99,867ஆக உள்ளது.
இந்தியாவை பொருத்தவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,90,609 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,408ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91,852 ஆக உள்ளது. அதிகமாக பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.