தமிழ்நாடு

மாயமான பெண்ணின் சடலத்தை தேடி தோண்டிய போலீசார்.. நாய்க்குட்டியின் சடலம் கண்டெடுப்பு

மாயமான பெண்ணின் சடலத்தை தேடி தோண்டிய போலீசார்.. நாய்க்குட்டியின் சடலம் கண்டெடுப்பு

Rasus

திருப்பூரில் கடந்த 5 மாதங்களுக்கு முன் காணாமல் போன இளம்பெண்ணின் சடலத்தை தேடுவதற்காக போலீசார் முயற்சியில் ஈடுபட்டனர். சடலத்தை கண்டுபிடிக்க தோண்டும்போது அதில் நாயின் சடலமே கண்டெடுக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்தரசி. இரண்டாம் ஆண்டு கல்லூரி படிப்பை படித்து வந்த அவருக்கு பரத் என்பருவடன் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. வீட்டின் எதிர்ப்பையும் மீறி முத்தரசி பரத்துடன் கடந்த மார்ச் மாதம் சென்றதாக கூறப்படுகிறது. இதனிடைய முத்தரசியை காணவில்லை என அவரது சகோதரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனிடையே பரத்துக்கும் முத்தரசிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பரத் முத்தரசியை தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. முத்தரசி வீட்டை விட்டு சென்ற அதே நாளிலே இந்த சம்பவம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரத்தின் தாய்க்கும் தெரிந்திருக்கிறது. அத்துடன் முத்தரசி உடலை வீட்டின் பின்புறமே புதைத்துள்ளனர். சிறிது நாட்களிலேயே பரத்திற்கு மற்றொரு திருமணமும் நடைபெற்றுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், கொலை செய்ததை பரத் மற்றும் அவரது தாயார் கடந்த 10 நாட்களுக்கு முன் ஒத்துக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து அவர்கள் இருவரோடு டிரைவரான குமார் என்பரையும் போலீசார் கைது செய்தனர். கொலை செய்த இடத்திலிருந்து வீட்டிற்கு முத்தரசி உடலை எடுத்துச் செல்ல குமார் உதவியதாக தெரிகிறது.

இதனிடையே பரத் வீட்டின் பின்புறத்தில் முத்தரசி உடலை தேடி போலீசார் தோண்டிப் பார்த்துள்ளனர். ஆனால் அங்கு நாய்க்குட்டியின் உடலே கண்டெடுக்கப்பட்டுள்ளது. முத்தரசியின் உடலை எடுத்துவிட்டு நாய்க்குட்டியின் உடலை அவர்கள் வைத்து புதைத்தது தெரியவந்துள்ளது. பரத்தின் தந்தையை கைது செய்வதன் மூலமே இக்கொலையின் மர்மம் விலகும் எனக் கூறப்படுகிறது.