தமிழ்நாடு

போதையில் இருந்த இளைஞரை நடுரோட்டில் வைத்து அடித்த ஆய்வாளர் - வீடியோ

போதையில் இருந்த இளைஞரை நடுரோட்டில் வைத்து அடித்த ஆய்வாளர் - வீடியோ

webteam

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மது போதையில் வந்த இளைஞரை உதவி ஆய்வாளர் ஒருவர் ‌நடுரோட்டில் நிற்க வைத்து அடித்த காட்சி வெளியாகியுள்ளது.

மேட்டூர் அருகே தங்கமாபுரி பட்டினம் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் அர்த்தநாரி என்பவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தார். தலைக்கவசம் அணியாமல் வருபவர்கள், முறையான ஆவணங்கள் இல்லாமல் வருபவர்கள், அதிவேகத்தில் வருபவர்கள் மற்றும் மது போதையில் வருபவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்பொழுது மதுபோதையில் வந்த ஒரு இளைஞரை பிடித்து நடுரோட்டில் நிற்க வைத்து அடித்த காவலர், தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தியுள்ளார். இந்தக் காட்சியை சாலையோரம் நின்று வேடிக்கை பார்த்த நபர் ஒருவர் இந்த வீடியோவை பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது போன்று அநாகரிகமாக நடந்து கொண்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளரின் செயலை பலர் கண்டித்து வருகின்றனர். 

மனித மாண்புகளை கடைப்பிடிக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே இதுபோன்று எல்லை மீறுவதை உயர் அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.