பெய்து வரும் தொடர் மழையால் சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள காந்தி நகர் பகுதியில் கூவம் ஆற்று நீர் குடியிருப்புக்குள் புகுந்ததால் மக்கள், தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி தங்க இடம் இன்றி தவித்து வருகின்றனர்.
சென்னையின் மைய பகுதியில் உள்ள சிந்தாதிரிபேட்டையில், நேற்று முந்தினம் பெய்த மழை காரணமாக அங்குள்ள காந்தி நகர் பகுதி வீடுகளுக்குள் கூவம் ஆற்று நீர் புகுந்தது. இரவு நேரம் என்பதால் மக்கள் தங்க இடமின்றி சிந்தாதிரிபேட்டை ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். தற்போது இப்பகுதியில் கொசுக்கள் அதிகரித்து குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகக் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, தங்களுக்கு முறையான வீடு கட்டித் தர வேண்டும் எனவும் மருத்துவ முகாம் ஒன்றை அமைத்து தர வேண்டும் என்றும் அவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.