கூட்டுறவு சங்கத் தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதி, முதல் கட்ட தேர்தல் வரும் நடைபெறவுள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு இடங்களில் திமுக, அதிமுக இடையே பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டு வருகிறது. கரூரில் கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான மனுத்தாக்கலின்போது அதிமுக மற்றும் டிடிவி தினகரனின் அமைப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய கூட்டுறவு சங்கத் தேர்தலை ஏதோ இடைத்தேர்தலை நடத்துவதுபோல தமிழக அரசு நடத்துகிறது. இது கண்டனத்துக்கு உரியது. வேட்புமனு தாக்கலின்போதே ஆளுங்கட்சியினரின் தூண்டுதலால்தான் தேர்தல் அதிகாரிகள் பகிரங்கமாக ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.