தமிழ்நாடு

கூலிங் கிளாஸ், செயின், ஜாக்கெட், சூட்டுடன் பந்தாவாக பைக்கில் பவனிவரும் ஊனமுற்ற நாய்

kaleelrahman

சென்னை பைபாஸ் சாலையில் தனது உரிமையாளருடன் பைக்கில் கெத்தாக வலம் வரும் ஊனமுற்ற நாய் ஜோனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள காட்டுபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரமோத் என்ற இளைஞர். இவர், ஜோனர் என்ற ஊனமுற்ற நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வருகிறார். இந்நிலையில், .நாய் ஜோனருக்கு பைக்கில் ரைடு செல்வது மிகவும் பிடிக்கும் என்பதால் ஜோனருக்கு கூலிங் கிளாஸ், கழுத்தில் ஸ்டைலான செயின், ஜாக்கெட் மற்றும் சூட் உள்ளிட்டவற்றை அணிவித்து தனது பைக்கில் அமரவைத்து பூந்தமல்லியில் இருந்து வண்டலூhர் - மீஞ்சூர் பைப்பாஸில் ரைடு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும் ஜோனர், பிறவியிலேயே வலது கால் ஊனமுற்ற நிலையில் இருந்ததால் அதனை செல்லமாக வளர்த்து வரும் பிமோத் பைக்கின் முன்பக்கம் அமர வைத்து ரைடு செல்லும் காட்சியை வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வேகமாக பரப்பி வருகின்றனர். அழகாக பைக்கில் அமர்ந்து பயமின்றி கெத்தாக ரைடு செல்லும் நாயின் வீடியோ தற்போது பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது

சாதாரணமாக மற்ற நாய்களை போல் ஓடி ஆடி விளையாட முடியாத தன் நாயை இது போல் பைக்கில் அழைத்து செல்வது தனக்கும் நாய்க்கும் புத்துணர்ச்சியை ஏற்ப்படுத்தவதாக பிரமோத் கூறினார்.