சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு web
தமிழ்நாடு

போர் எதிரொலி.. சென்னையில் சிலிண்டர் விலை உயர்வு!

ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலியாக சென்னையில் வீட்டு உபயோக மற்றும் வணிக சிலிண்டர்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

Rishan Vengai

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா போர் காரணமாக சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்காவிற்கு இடையேயான போர் ஒருவாரம் கடந்தும் நடைபெற்றுவருவதால், உலகளவில் எரிபொருள் விநியோகம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 3 வாரத்திற்கு தேர்வையான எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், விலையேற்றத்திற்கான வாய்ப்பு இருக்காது எனவும் சொல்லப்பட்டது.

ஈரான் மீது தாக்குதல்

இந்தசூழலில் ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா போர் காரணமாக சென்னையில் வணிக சிலிண்டர் மட்டுமில்லாமல் வீட்டு உபயோக சிலிண்டரின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை உயர்வு..

சென்னையில் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்து ஒரு சிலிண்டர் ரூ.928.50ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்து ஒரு சிலிண்டர் ரூ.2.043.50ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர்

ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா போர் எதிரொலியால் உலக பொருளாதாரம் பெரியளவில் பாதிக்கப்படும் நிலையில், இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயர்வுடன், பணவீக்கமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.