குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை மாநகராட்சியால் வெளியிடப்பட்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரபல நடிகர் யோகிபாபுவுடன், சிறுமி ஒருவர் குப்பைகளால் ஆன கிரீடம் அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை மாநகராட்சி வெளியிட்டது.
இந்நிலையில், இது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் எனக்கூறி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கர் என்பவர் புகார் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட புகைப்படத்தை விரைந்து நீக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி, யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தாத வகையில் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.