தமிழ்நாடு

கலாம் நினைவிடத்தில் செய்தி சேகரிக்க கட்டுப்பாடு

கலாம் நினைவிடத்தில் செய்தி சேகரிக்க கட்டுப்பாடு

webteam

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் செய்தி சேகரிக்க பத்திரிக்கையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற பிறகே பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிக்கலாம் என்று இந்திய ராணுவ ஆராய்ச்சி கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கலாம் நினைவு மண்டபத்திற்குள் செல்போன், கேமரா உள்ளிட்டவைகளைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கேட்டதற்கு, கலாம் நினைவிடம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், தன்னால் அனுமதி வழங்க இயலாது எனக் கூறினார். இருப்பினும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டால் அனுமதி அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

முன்னதாக, கலாம் நினைவிடத்தில் பைபிள், குரான் வைக்கப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அங்கிருந்து அந்த புனித நூல்கள் அகற்றப்பட்டு பேழையில் வைக்கப்பட்டன.