தமிழ்நாடு

தாய்நாட்டு விவசாயத்தில் பங்கெடுங்கள்: கார்த்திகேய சிவசேனாபதி வேண்டுகோள்

தாய்நாட்டு விவசாயத்தில் பங்கெடுங்கள்: கார்த்திகேய சிவசேனாபதி வேண்டுகோள்

webteam

”வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாய்நாட்டு விவசாயத்தில் பங்கெடுக்க வேண்டும்” என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர் கார்த்திகேய சிவசேனாபதி வலியுறுத்தியுள்ளார்.

காங்கேயம் காளைகளைக் குறித்த ஆய்வு மைய நிறுவனரும், ஜல்லிக்கட்டு ஆர்வலருமான திரு கார்த்திகேய சிவசேனாபதிக்கு எடின்பர்க் தமிழ்ச் சங்கம் சார்பில், ஸ்காட்லாண்டில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய கார்த்திகேய சிவசேனாபதி, இனத்தோடும் கலாச்சாரத்தோடும், உணர்வுகளோடும் கலந்துவிட்ட கால்நடைகளின் முக்கியத்துவம், தற்கால இயந்திரமாக்கலின் விளைவுகள், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தான் எதிர்கொண்ட மனிதர்கள், இன்னல்கள், கற்றுக்கொண்ட விஷயங்கள் ஆகியவற்றைக் குறித்து உரையாற்றினார்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தங்கள் தாய்நாட்டின் விவசாயம் சார்ந்த துறைகளில் பங்கெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், ஸ்காட்லாண்டில் உள்ள அபெர்டீன் நகரில் தமிழர்கள் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் உரையாற்றினார்.