தமிழ்நாடு

ஒரே நாளில் 10 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

ஒரே நாளில் 10 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

webteam

உதகை அருகே ஒரே நாளில் 10 வீடுகளில் நடைபெற்ற தொடர் திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் முழுவதும் படுகர் இன மக்களின் பண்டிகை நடைபெற்று வருவதால், பைகமந்து கிராம ‌மக்கள் வீடுகளை பூட்டி‌விட்டு அருகில் இருக்கும் உறவினர்கள் வீட்டிற்குச் சென்றுள்ளனர். பண்டிகை முடிந்து வீடு திரும்பிய சிலர், தங்களது வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

இதையடுத்து தங்கள் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டதை உணர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் 10 வீடுகளில் இருந்து 2 லட்சம் ரொக்கமும், 20 சவரன் நகைகளும் கொள்ளை போயிருக்கலாம் என பாதிக்கப்பட்டோர் தரப்பில் கூறப்படுகிறது.