தமிழ்நாடு

வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை..? அதிகாரிகள் மறுப்பு

வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை..? அதிகாரிகள் மறுப்பு

Rasus

வங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என வாட்ஸ்அப்பில் வரும் தகவல்கள் தவறானவை என வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31 ஆம் தேதி வங்கிகள் செயல்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வரும் 29-ம் தேதி முதல் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை என கடந்த சில தினங்களாக ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. மேலும் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை விடப்படுவதால் பொதுமக்கள் அதற்கேற்றவாறு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறும் செய்தி பரவியது. இதனால் மக்கள் சிறிது பதற்றம் அடைந்தனர். இந்நிலையில் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை என வாட்ஸ்ஆப்பில் வரும் தகவல்கள் தவறானவை என வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அவர்கள், வரும் 29-ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டும் 30-ம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் 31-ம் தேதியான சனிக்கிழமை வங்கிகள் முழுநாள் செயல்படும். அன்றைய தினமே வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தணைகளை உள்பட அனைத்து சேவைகளையும் மேற்கொள்ளலாம் ஏப்ரல் ஒன்றாம் தேதி ஞ‌யிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாள்.  ஏப்ரல் 2 ஆம் தேதி வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் தினம் எனவும், ஆகவே அன்றைய தினம் வங்கிகள் செயல்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், பணப் பரிவர்த்தணை மற்றும் வாடிக்கையாளர் சேவை ஏதும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் தெரிவித்தனர். வாட்ஸ்அப்பில் வருவது போல 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடையாது எனவும் கூறினர்.