கதிராமங்கத்திலிருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி 4 ஆவது நாளாக மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எண்ணெய் எடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஓ.என்.ஜி.சி குழாய்கள் மூலம் மீத்தேன் எடுக்கப்படுவதாக கூறி கடந்த 2 மாதங்களாக கதிராமங்கலம் மக்கள் தொடர் போரட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 30 ஆம் தேதி ஓ.என்.ஜி.சி குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், மீத்தேன் எதிர்ப்புக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். அப்போது, தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்த காவல்துறையினர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி 50க்கும் அதிகமானோர் கதிராமங்கலத்திலுள்ள அய்யனார் கோயில் திடலில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்கின்றனர்.