தமிழ்நாடு

தொடரும் கடல் ஆமைகள் திருட்டு - மீட்டு கடலில் விட்ட வனத்துறையினர்

தொடரும் கடல் ஆமைகள் திருட்டு - மீட்டு கடலில் விட்ட வனத்துறையினர்

PT

தருவைகுளத்தில் கடத்தப்பட்ட கடல் ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரைப் பகுதியில் உயிருடன் கடல் ஆமைகள் கடத்தப்படுவதாக கடலோர காவல்படை போலீசாருக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலை அவர்கள் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக வனத்துறையினருக்கு  தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து  கடலோர காவல்படை மற்றும் வனத்துறையினர் இணைந்து தருவைகுளம் கடற்கரையில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் உயிருடன் பிடிக்கப்பட்டு வாகனத்தில்  கடத்தப்படவிருந்த 5 கடல் ஆமைகளை மீட்ட வனத்துறையினர் காவல்படை அதிகாரிகளின் உதவியுடன் மீண்டும் கடலில் விட்டனர்.

இது தொடர்பாக கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருந்த ஆட்டோ, இருச்சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த வனத்துறையினர் ஓட்டுநரையும் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய தூத்துக்குடி பாத்திமா நகரைச்  சேர்ந்த இருவரை  வனத்துறையினர் தேடி வருகின்றனர். இது தொடர்பாக கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு குறித்தும்  விசாரணை நடைபெற்று வருகிறது.