தமிழ்நாடு

கோடநாடு எஸ்டேட்டில் 5வது நாளாக இன்றும் சோதனை

கோடநாடு எஸ்டேட்டில் 5வது நாளாக இன்றும் சோதனை

webteam

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கர்சன் பகுதியில் உள்ள கிரீன் டீ எஸ்டேட்டில், 5வது நாளாக இன்றும் விசாரணை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக அங்கு நான்காவது நாளாக வருமான வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், எஸ்டேட் எப்படி வாங்கப்பட்டது, அதற்கான நிதி எங்கிருந்து வந்தது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கர்சன் எஸ்டேட் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளதா என்பது போன்ற கேள்விகளும் கேட்கப்பட்டதாக தெரிகிறது. 

இதற்கிடையில் புதுச்சேரி லட்சுமி ஜுவல்லரி மற்றும் அதன் கிளைகளில் கடந்த 4 நாட்களாக நடந்து வந்த வருமான வரி சோதனை நிறைவடைந்துள்ளது. இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் நகைக்கடை குழுமத்தின் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.