தமிழ்நாடு

கொரோனா சிகிச்சை மருந்துகள் தடையின்றி கிடைக்கட்டும்: அதிகாரிகளிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்

கொரோனா சிகிச்சை மருந்துகள் தடையின்றி கிடைக்கட்டும்: அதிகாரிகளிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்

sharpana

சென்னையில் உள்ள மு.க ஸ்டாலின் இல்லத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், வருவாய்த்துறை செயலாளருடனான கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையின் போது, “தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று மு.க ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

மேலும், அவர் கொரோனா சிகிச்சைக்காக, மருந்துகள், ஆக்சிஜன்கள், தடையின்றி கிடைக்கவேண்டும். நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் படுக்கை வசதி தடையின்றி கிடைக்கவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.