காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ஆனந்த் சினீவாசன்
காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ஆனந்த் சினீவாசன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிரச்னை இல்லை” - காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ஆனந்த் சினீவாசன்

webteam

செய்தியாளர்: ராஜ்குமார்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் தகவல் துறையில் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்த் சீனிவாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்... “இன்று நான் ஊடக பிரிவு தலைவராக பதிவியேற்றுள்ளேன். காங்கிரஸ் தொடர்பான கேள்விகளுக்கு நான் சொல்லும் ஆதாரப்பூர்வமான தகவல்கள் உண்மையானது.

ஆனந்த் சினீவாசன்

திமுகவிற்கும் எங்களுக்கும் பிரச்னை இருப்பதாக சமூக ஊடகங்களில் வரும் தகவல் தவறு. மூன்று நாட்களில் தொகுதிப்பங்கீடு முடிவுக்கு வரும். எங்கள் கூட்டணி நிச்சயம் 40:40 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழ்நாடு அல்லாத மற்ற மாநிலங்களில் ஊடகங்கள் பெரும்பாலும் ஆளும் கட்சிக்கு எதிரான தகவல்களை மக்களிடம் கொண்டு செல்வதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அப்படியொரு நிலைமை இல்லை. இருப்பினும் சமூக ஊடகங்கள், ஆளும் பாஜகவினரும் ஆதரவாளர்களும் செய்யும் தவறினையும் சுட்டிக்காட்டி மக்களுக்கு அதனை கொண்டு செல்லவேண்டும்.

அதிமுக என்ன நிலைமையில் உள்ளதென்றால் எம்.ஜி.ஆர் புகைப்படத்திற்கு பதில் அரவிந்த்சாமி படத்தை போஸ்டரில் போடும் நிலைமையில் உள்ளது. எம்.ஜி.ஆரை மறந்த கட்சியைப் பற்றி பேச ஒன்றுமில்லை. அவர்கள் தங்கள் வாக்குகளை பாஜகவிற்கு தாரைவார்க்கிறார்கள். காங்கிரஸில் தமிழ்நாடு ஊடகப் பிரிவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் மாநில தலைவருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.