amit shah - cm vijay ani
தமிழ்நாடு

இன்று தென்மாநில முதல்​வர்​கள் மாநாடு.. அமித் ஷாவுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

இன்று தென்மாநில முதல்​வர்​கள் மாநாடு நடைபெறவிருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் முதல்வர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Rishan Vengai

சென்னை அருகே கோவளத்தில் இன்று நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாடு, தென் மாநிலங்களின் ஒத்துழைப்பு, பொருளாதார முன்னேற்றம், தொழில் முதலீடுகள் போன்ற பல முக்கிய விஷயங்களை மையப்படுத்துகிறது.

31ஆவது தென்மாநில முதல்​வர்​கள் மாநாடு சென்​னையை அடுத்த கோவளத்​தில் இன்று நடை​பெறுகிறது. தமிழகம், கேரளம், கர்​நாட​கா, ஆந்​தி​ரா, தெலங்​கானா மற்​றும் புதுச்​சேரி மாநிலங்​களின் முதல்​வர்​கள் மற்​றும் உயர​தி​காரி​கள் இதில் பங்​கேற்​கின்​றனர். மாநிலங்​களுக்கு இடையே​யான ஒத்​துழைப்​பு, பொருளாதார வளர்ச்​சி, தொழில் முதலீடு​கள் உள்ளிட்ட பல்​வேறு முக்​கிய விவ​காரங்​கள் குறித்து ஆலோசனை நடத்​தப்பட உள்​ளது.

இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்குவதற்காக இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். சுமார் 50 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் பற்றி ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது.