பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 4 ,113 தேர்வு மையங்களில் நடைபெறும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை, மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 84 பேர் எழுதுகின்றனர். இதற்காக 48, 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுவார்கள். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க 4, 800க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “ 15, 729 மாற்றுத்திறனாளி மாணாக்கருக்கு, மொழிப்பாட விலக்கு, சொல்வதை எழுதுபவர், இவர்களுக்கு தேர்வெழுத கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. புகார் குறித்து மாணவர்கள் தெரிவிக்க தேர்வு கட்டுப்பாட்டு தொடர்பு எண்களும் வெளியிடப்பட்டுள்ளன.
நாளொன்றுக்கு சுமார் 48 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 4, 800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வு பணியில் ஈடுபடுவார்கள். தடையை மீறி தேர்வர்களோ, ஆசிரியர்களோ செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் . ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் குற்றங்களுக்கு ஏற்றவாறு தண்டனை வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.