தமிழ்நாடு

முற்றிலும் கணினிமயமாக்கப்படும் டேன்ஜெட்கோ நிறுவனம்

கலிலுல்லா

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான டேன்ஜெட்கோ முற்றிலும் கணினிமயமாக்கப்படுவதாக அதன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

டேன்ஜெட்கோவின் இயக்குநர் வாரியம் தொடங்கி நிலக்கரி மற்றும் காற்றாலை மின்உற்பத்தி நிலையங்கள் வரை கணினிமயமாக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது. இதன்மூலம், வீண் விரயம் தவிர்க்கப்பட்டு பல்வேறு நிலையில் நஷ்டம் குறைய வழியேற்படும் என்று அவர் கூறினார். ஸ்மார்ட் மீட்டர்களுக்காக காத்திராமல் வீடுகளுக்கான மின்சார நுகர்வோரின் பயனீட்டு அளவைக் கணக்கிட செல்ஃபோன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த உயரதிகாரி தெரிவித்தார்.

கணக்கீட்டாளர் தனது செல்ஃபோன் செயலியில் மீட்டரின் மின்பயன்பாட்டு அளவை பதிவு செய்ததும், செலுத்த வேண்டிய கட்டண விவரங்கள் நுகர்வோரின் செல்ஃபோனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்று அவர் கூறினார். இதுவரை பரிசோதிக்கப்பட்ட 27 பகுதிகளில் இந்த செயலி சரியாக செயல்படுவது தெரிய வந்திருப்பதாகவும் அவர் கூறினார். எனவே, சென்னை மற்றும் வேலூரில் செயலியை பயன்படுத்த கணக்கீட்டாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் டேன்ஜெட்கோவின் உயரதிகாரி தெரிவித்தார்.