ரவுடி நாகேந்திரன் - ஆம்ஸ்ட்ராங் web
தமிழ்நாடு

பிரபல ரவுடி நாகேந்திரன் இறக்கவில்லை.. அரசு தப்பிக்க வைத்துவிட்டது என பகீர் புகார்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி உடல்நலக்குறைவால் மரணமடைந்த பிரபல ரவுடி நாகேந்திரன் இன்னும் மரணம் அடையவில்லை என நீதிமன்றத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது..

Rishan Vengai

பிரபல ரவுடி நாகேந்திரன் மரணமடைந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தப்பிக்க வைத்ததாகவும் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், A1 குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பிரபல ரவுடி நாகேந்திரன் சமீபத்தில் உடல் நல பாதிப்பால் மரணம் அடைந்தார்.

ஆம்ஸ்ட்ராங்

முன்னதாக, காவல்துறை விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என ஆர்ம்ஸ்டராங் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது.

ரவுடி நாகேந்திரன்

இந்நிலையில் நீதிமன்ற வழக்கு விசாரணையில் மரணமடைந்த ரவுடி நாகேந்திரன் இன்னும் சாகவில்லை என பகீர் புகார் அளிக்கப்பட்டுள்ளது..

ரவுடி நாகேந்திரன் சாகவில்லை..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் உள்ளிட்ட ஜாமீன் மனு மீதான வழக்குகள் இன்று நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி நாகேந்திரன் இன்னும் மரணடையவில்லை எனவும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அரசுதான் தப்பிக்க வைத்துவிட்டதாக ஆம்ஸ்ட்ராங் சகோதரர் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஸ்வத்தாமன்

மேலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்துவிடுவார்கள், அதனால் ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் வாதிடப்பட்டது. இந்தசூழலில் வாதங்களை கேட்ட நீதிபதி, ஜாமீன் மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.