தமிழ்நாடு

கோடநாடு எஸ்டேட்டை மிரட்டி வாங்கினார்: சசிகலா குடும்பம் மீது புகார்

கோடநாடு எஸ்டேட்டை மிரட்டி வாங்கினார்: சசிகலா குடும்பம் மீது புகார்

webteam

கோடநாடு எஸ்டேட்டை சசிகலா குடும்பத்தினர் மிரட்டி வாங்கியதாக அதை விற்பனை செய்த பிரிட்டனைச் சேர்‌ந்த பீட்டர் கிரேக் ஜோன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், சந்தை மதிப்பில் இருந்து பாதி விலையை மட்டுமே அவர்கள் அளித்ததாகவும் கூறியுள்ளார். தன்னுடைய குடும்பத்திற்கு பல்வேறு வகைகளில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகவும் பீட்டர் புகார் தெரிவித்துள்ளார்.

சசிகலா குடும்பத்தார் தன்னுடைய குடும்பத்திற்கு சொந்தமான 900 ஏக்கர் தேயிலை எஸ்டேட்டை பல வகைகளில் தொந்தரவு கொடுத்து வாங்கியதோடு சந்தை மதிப்பு ரூ.12 முதல் ரூ.15 கோடி வரை உள்ள எஸ்டேட்டிற்கு வெறும் 7.6 கோடியை மட்டுமே தந்ததாகவும், 1975 முதல் 1994 வரை நூற்றுக்கணக்கான எஸ்டேட் ஊழியர்களுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த தான், தனக்கு கிடைத்த பணத்தை உறவினர்களுக்கு கொடுத்துவிட்டு தற்போது தனியார் எஸ்டேட்டில் மேற்பார்வையாளராக இருந்து வருவதாகவும் தெரிவித்தார். 

ஜெயலலிதா மற்றும் சசிகலா இருந்தவரை தன் இருப்பிடத்தை கூட வெளியில் காட்ட விரும்பாமல் ஒரு பழைய பங்களாவில் ஒரே ஒரு உதவியாளரோடு வாழ்ந்து வரும் இவர், மனிதர்களை நம்பி மோசம் போனதால், தான் வளர்க்கும் செல்லப் பிராணி்யை மட்டுமே தற்போது நம்புவதாகத் தெரிவித்தார்.