தமிழ்நாடு

நித்யானந்தா ஆசிரமத்திற்கு எதிராக புகார்

நித்யானந்தா ஆசிரமத்திற்கு எதிராக புகார்

webteam

தேனியை சேர்ந்த மருத்துவர் ஒருவரை திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சிறை வைத்திருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேனியை சேர்ந்த காந்தி - ஈஸ்வரி என்ற தம்பதியின் மகனான மருத்துவர் மனோஜ்குமார் என்பவரை நித்யானந்தாவின் சீடர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் கடத்தி வந்து ஆசிரமத்தில் வைத்திருப்பதக பெற்றோர் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மனோஜ்குமாரின் அக்காள் மகளான நிவேதா என்ற இளம் பெண்ணையும் ஆசிரமத்தில் வைத்திருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தங்களது மகனையும், பேத்தியையும் மீட்டு தர வலியுறுத்தி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நித்யானந்தர் ஆசிரமத்திற்கு முன் மனோஜின் பெற்றோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர். கடத்தப்பட்டதாக கூறப்படும் மனோஜ்குமாரின் தொலைபேசியை தொடர்புகொண்டபோது தம்முடைய முழு சம்மதத்துடன் ஆன்மீக வாழ்வை ஏற்று ஆசிரமத்தில் இருப்பதாக தெரிவித்தார்.