தமிழ்நாடு

மாணவர்களை கொத்தடிமைகள் போல் நடத்துவதாக தலைமையாசிரியர் மீது புகார்

மாணவர்களை கொத்தடிமைகள் போல் நடத்துவதாக தலைமையாசிரியர் மீது புகார்

webteam

கிருஷ்ணகிரி மாவட்டம் தொட்டமெட்டறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களைக் கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய த‌லைமை ஆசிரியர் வலியுறுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் தொட்டமெட்டறை ஊராட்சி ஒன்றிய தொ‌டக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பவர் உஷா. இவர் தான் கொண்டுவரும் உணவை சூடு‌படுத்தச் சொல்லுவது, காய்கறிகள் வாங்கி வரச் சொல்லுவது உள்ளிட்ட செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.  கழிப்பறையை சுத்தம் செய்ய சொல்வதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டை தலைமை ஆசிரியர் உஷாவை மறுத்துள்ளார். மேலும் தாம் எந்த மாணவரையும் வேலை வாங்குவதில்லை எனவும், சிலரது தூண்டுதலின்பேரிலேயே மாணவர்கள் குற்றம்சாட்டுவதாகவும் தெரிவித்தார்.