தமிழக-கேரள எல்லையை இணைக்கும் குமுளியிலுள்ள தனியார் விடுதிக்குள் நுழைந்து குரங்குகள் சேதப்படுத்திய பொருட்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என புலிகள் காப்பக வனத்துறையினர் உறுதியளித்துள்ளனர்.
தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு, உணவுக்காக வனத்திற்குள் இருந்து வெளியே வரும் குரங்குகள், தனியார் விடுதிக்குள் சென்று விடுதி அறையில் உள்ள மின் விளக்குகள், ஏசி, கட்டில், மெத்தை ஆகியனவற்றை உடைத்து சேதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனத்துறையினர், தங்கும்
விடுதிக்கு வந்து பார்வையிட்டனர். இழப்பீட்டை மதிப்பீடு செய்து அதற்கான தொகையை வழங்குவதாகவும், குரங்குகளை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் அப்போது வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர்,