தமிழ்நாடு

சமூக பங்களிப்பு நிதி: சிறு குறு நிறுவனங்கள் தாமாக முன்வர வேண்டும் - அமைச்சர் நாசர்

kaleelrahman

சிறு குறு நிறுவனங்கள் சமூக பங்களிப்பு நிதியை தாமாக முன்வந்து வழங்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனையில், தனியார் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய ஆக்சிஜன் ஜெனரேட்டர் நிறுவப்பட்டது. இதனை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் “திருவள்ளூர் மாவட்டத்தில் சிறு குறு உள்பட ஆயிரத்து 500 தொழிற்சாலைகள் செயல்படுகிறது. இதில், 43 தொழிற்சாலைகள் மட்டுமே சமூக பங்களிப்பு நிதியை முறையாக வழங்குகிறது. சிறு குறு நிறுவனங்கள் சமூக பங்களிப்பு நிதியை தாமாக முன்வந்து வழங்க வேண்டும்”  எனக் கேட்டுக்கொண்டார்.