தமிழ்நாடு

மதுரை: பூம் பூம் மாட்டுக்காரர் சமூகத்தினருக்கு ஜாதி சான்றிதழ்-நிறைவேறிய நீண்டநாள் கோரிக்கை

மதுரை: பூம் பூம் மாட்டுக்காரர் சமூகத்தினருக்கு ஜாதி சான்றிதழ்-நிறைவேறிய நீண்டநாள் கோரிக்கை

webteam

மதுரை மாவட்டத்தில் பூம் பூம் மாட்டுக்காரர், காட்டு நாயக்கர் சமூகங்களைச் சேர்ந்த 33 குடும்பத்தினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் கிழக்கு தாலுகாவிற்கு உட்பட்ட சக்கிமங்கலம் எல்.கே.பி நகர் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் நீண்ட நாட்களாக ஜாதி சான்றிதழ் இல்லாமல் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க சிரமம் ஏற்படுவதாகவும், அதனால் தங்களது குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கும்படி பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் மனு கொடுத்து வந்தனர்.

இதையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் என அழைக்கப்படும் ஆதியன் வகுப்பினருக்கு 16 சான்றிதழ்களும் , காட்டு நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த 17 பேருக்கு பழங்குடியினர் சான்றிதழ்களையும் மேலூர் கோட்டாட்சியர் பிர்தௌஸ்பாத்திமா நேரில் வழங்கினார்.

ஜாதி சான்றிதழ் வழங்கிய பின் பழங்குடியின மக்களிடம் பேசிய வருவாய் கோட்டாட்சியர் பிர்தௌஸ்பாத்திமா, குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.