தமிழ்நாடு

சீர்வரிசையுடன் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு நடத்திய சமுதாய வளைகாப்பு விழா

webteam

குண்டடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 180 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுவாயில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 180 கர்ப்பிணி பெண்களுக்கு நலுங்கு வைத்து புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், வெற்றிலை - பாக்கு, பழம், பூ உள்ளிட்ட சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு சர்க்கரை பொங்கல், புளி சாதம், தேங்காய் சாதம் மற்றும் தயிர் சாதம் உள்ளிட்ட 5 வகையான உணவுகள் பரிமாறப்பட்டது.

அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் உடல் எடை மற்றும் ரத்த அழுத்தம் சரிபார்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. மேலும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தனது சொந்த நிதியிலிருந்து தாலா ரூ.1,000 ரொக்க பணமும் வேட்டி, சேலைகளையும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார்.