கடலூர் மாவட்டம் வெய்யலூர் கிராம அரசு உயரநிலைப் பள்ளியில், மாணவர்களிடையே பாகுபாடு காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் என்று சிலரை மட்டும் அடையாளப்படுத்தி அவர்களை கழிவறையை சுத்தம் செய்ய ஆசிரியர்களே நிர்பந்தம் செய்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஆசிரியர்களின் இத்தைகைய செயல்பாடு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் எனவும் பள்ளிகளில் சாதிபாகுபாடு காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் ஆசிரியர்கள் மிரட்டுவதால் மாணவர்கள் அச்சம் அடைந்து காணப்படுகின்றனர்