மதவாத சக்திகள் பலப்படுவது நாட்டிற்கு நல்லதல்ல என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள முத்தரசன் மதவாத சக்திகளும், வகுப்புவாத சக்திகளும் பலப்படுவது நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல என தெரிவித்துள்ளார். இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், மிகப்பெரிய ஆபத்துக்கு இந்திய மக்கள் அங்கீகாரம் கொடுத்திருப்பதாக தெரிவித்தார்.