தவெக தலைவர் விஜய் PTI
தமிழ்நாடு

விஜய் காரை வழிமறித்த தொண்டர்கள்.. அப்புறப்படுத்திய பவுன்சர்கள்.!

ஈரோடு சரளையில் நடைபெற்ற தவெக கூட்டத்தினை முடித்து கொண்டு விஜய் காரில் புறப்பட்டார். அப்போது தொண்டர்கள் காரை செல்ல விடாமல் வழிமறித்து செல்பி எடுத்தபோது சிலர் கார் முன்பக்கதில் விழுந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டது.

PT WEB

தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகேயுள்ள சரளையில் நடைபெற்றது. தவெக கூட்டத்தில் விஜய்யின் பேச்சை கேட்பதற்கும் அவரை காணவும் மக்கள் சாரை சாரையாக ஆயிரக்கணக்கானோர் திடலுக்கு வருகை புரிந்து காத்திருக்கின்றனர்.

திருப்பூர் கோயம்புத்தூர், ஒசூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வருகை புரிந்த நிலையில் விஜய் கூட்டத்தில் பேசி முடித்தவுடன் காரில் ஏறி புறப்பட்டு விமானம் மூலம் சென்னை செல்ல முற்பட்டார். அப்போது விஜயமங்கலம் சுங்கச்சாவடியை விஜய் கடந்த போது தவெக தொண்டர்கள் சுங்கச்சாவடியை சூழ்ந்து கொண்டு விஜய்யின் காரை செல்லவிடாமல் அவர் கார் முன் மறித்து நின்று செல்பி மற்றும் வீடியோ எடுத்து கொண்டனர். விஜய்யின் கார் முன்பாக சிலர் வீடியோ எடுக்க முற்பட்டபோது கார் முன்பாக விழுந்ததை அடுத்து அவருடன் சென்ற பவுன்சர்கள் பொதுமக்களை அப்புறப்படுத்தினர். பின் சாலை வழியாக கோயம்புத்தூர் செல்ல ஆரம்பித்தார்.