மத்திய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் திட்டங்கள் சரியான முறையில் நடைமுறைபடுத்தப்படுவதை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த குழுவில், மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அந்த குழுவில், டி.ஆர்.பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ஆ.ராசா, எம்.செல்வராஜ், பி.ஆர்.நடராஜன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். திருமாவளவன், ரவீந்திரநாத் குமார், நவாஸ் கனி ஆகிய எம்.பி.க்களும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோரும் குழுவில் உள்ளனர்
மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், டாக்டர் எழிலன், டி.கே.ஜி.நீலமேகம், பூமிநாதன், ஜெ.எம்.எச்.ஹசன் மவுலானா, ஏ.கே.செங்கோட்டையன் ஆகியோரும் கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.