மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று விசாரணையை தொடங்க உள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் செப்டம்பர் 29ஆம் தேதி அரசாணைகள் பிறப்பித்தது. அதன்படி, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலை, சிகிச்சை முறை, மரணத்திற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து சென்னை எழிலகத்தில் உள்ள அலுவலகத்தில் ஆறுமுகசாமி கடந்த வாரம் பொறுப்பேற்றார். இந்நிலையில் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ்கார்டனில் நீதிபதி ஆறுமுகசாமி இன்று விசாரணையை தொடங்க திட்டமிட்டுள்ளார்.